News December 12, 2025

சிவகங்கை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

சிவகங்கை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக் <<>>செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

Similar News

News December 18, 2025

காரைக்குடி: பூட்டை உடைத்து நகை திருட்டு.. தொழிலாளி கைது

image

காரைக்குடி அருகே கோட்டையூர் அருணாசலம் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் தினகரன். இவருக்கு சொந்தமான தோட்டம் மணச்சை பகுதியில் உள்ளது. இங்கு காரைக்குடி நெசவாளர் காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து, 5 மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து நின்று விட்டார். இந்நிலையில் தினகரன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவன் நகையை ரவிச்சந்திரன் திருடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

News December 18, 2025

சிவகங்கை: தந்தை மூளைச்சாவு.. குடும்பத்தார் நெகிழ்ச்சி செயல்

image

சிங்கம்புணரி அருகே ஏரியூரைச் சேர்ந்த கட்டட பொறியாளர் எஸ்.குமரப்பன் (55) மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மகன்கள் தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிச.16ல் மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினர் சம்மதத்துடன் குமரப்பனின் கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டது.

News December 18, 2025

சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்னான +91-9013151515-ஐ SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!