News December 12, 2025
திருச்சி: கடன் தொல்லையால் விபரீத முடிவு

செங்காட்டுப்பட்டி அடுத்துள்ள கீரம்பூர் காலனியில் வசிப்பவர் ராஜேந்திரன் இவர் தனது மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று அருகே உள்ள தம்பு என்பவருடைய வயலில் இறந்த நிலையில் இருபதை கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். விசாரணையில் இவர் கடன் தொல்லையால் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Similar News
News December 16, 2025
சூப்பர் வாய்ப்பு: திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள், 3 இருசக்கர வாகனம் என மொத்தம் 29 வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் 19-ம் தேதி கே.கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆதார் அட்டையுடன், முன்பணம் ரூ.5000 செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என திருச்சி மாநகர கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

திருச்சி: ரயில் மோதி பரிதாப பலி

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.