News April 29, 2024
ஏப்ரல் 29: வரலாற்றில் இன்று

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லியன்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி ராணுவம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
1945 – ஹிட்லர் தனது நீண்ட நாள் காதலியை, பெர்லின் சுரங்கத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
1967 – அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்த காரணத்தினால், குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் பதக்கங்கள் திரும்பப் பெறப்பட்டன.
Similar News
News January 31, 2026
பிப்ரவரி முதல் அரசு மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை பிப்ரவரியில் (திங்கள்கிழமை முதல்) தொடங்கவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் பிப்ரவரி 2-வது வாரம் வெளியாகும். அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கவுள்ளது. நவீன உள்கட்டமைப்புகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
News January 31, 2026
நாடு முழுவதும் ஸ்டிரைக்

8-வது ஊதியக் குழு, ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நியமனம் தொடர்பான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், பிப்.12-ல் வேலைநிறுத்தம் செய்யப்படும் என மத்திய அரசு ஊழியர்கள் & தொழிலாளர்கள் கூட்டமைப்பு (CCGEW) அறிவித்துள்ளது. வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்யக்கோரி, சமீபத்தில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
News January 31, 2026
கூட்டணி ஆட்சி இல்லை: தம்பிதுரை

தேர்தலுக்காக மட்டும்தான் கூட்டணியே தவிர; கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என தம்பிதுரை தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக வெற்றி பெற்று, EPS முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியிலுள்ள சில கட்சிகள் ‘கூட்டணி ஆட்சி’ எனக்கூறி வரும் நிலையில், திமுக போலவே ‘கூட்டணி ஆட்சி இல்லை’ என்பதை தம்பிதுரை தனது பேச்சு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.


