News April 29, 2024
கைதி பட பாணியில் விஜய் தேவரகொண்டா படம்

கௌதம் தினனுரி இயக்கும் புதிய படத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இதில் விஜய் தேவரகொண்டா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படம் ‘கைதி’ படத்தை போல, பாடல்களே இல்லாத படமாக உருவாகி வருகிறது. விறுவிறுப்பான கதைக்கு பாடல்கள் தேவைப் படாததால், இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News February 21, 2026
சுந்தர் பிச்சை பொன்மொழிகள்

▶உங்களால் தோற்க முடியாவிட்டால், உங்களால் போதுமான அளவு புதுமைகளை உருவாக்க முடியாது.▶வாழ்க்கையில் அவ்வப்போது பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுவது நல்லது. அதுதான் உங்களை அடுத்த நிலைக்குத் தள்ளும். ▶நீங்கள் எப்போதும் மற்றவர்களை விடச் சிறந்தவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் உங்கள் நேற்றைய நாளை விட இன்று சிறந்தவராக இருக்க முயற்சி செய்யுங்கள்.
News February 21, 2026
அணியில் நீடிப்பாரா அபிஷேக் சர்மா?

நம்பர் 1 டி20 வீரரான அபிஷேக் சர்மா கடந்த 7 போட்டிகள் 5 முறை டக் டவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார். இதனால் டி20 WC சுப்பர் 8 சுற்றுகளில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. இந்நிலையில், அபிஷேக் விளையாடுவதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும், அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் எனவும் இந்தியாவின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளர்.
News February 21, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை
▶குறள் எண்: 616
▶குறள்:முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
▶பொருள்:முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.


