News December 12, 2025

சங்ககிரி அருகே கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

சங்ககிரி: சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கௌதம் உட்பட ஆறு பேர், திருப்பூரி பணியை முடித்துவிட்டு, நேற்று காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் சேலம் கோவை பைபாஸ் மகுடஞ்சாவடியில் உள்ள மேம்பாலத்தில் சென்ற போது லாரியின் பின்பக்கத்தில் இவர்களது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் கௌதம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் மற்றவர் 5 பேர் காயமடைந்தனர்.

Similar News

News December 12, 2025

சேலம்: 2,039 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்!

image

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்ட மாவட்டமாக சேலம் திகழ்கிறது. மொத்தம் 2,039 மாற்றுத்திறனாளிகள் இந்த பயனடைந்துள்ளனர். மேலும், கடந்த நான்கரை ஆண்டுகளில் 2.05 லட்சம் பேருக்கு ரூ.199.12 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

சேலத்தில் இரண்டாம் கட்டமாக கலைஞர் உரிமைத்தொகை!

image

சேலம் மாவட்ட மகளிர்க்கான தமிழக அரசின் கலைஞர் உரிமைத்தொகை இரண்டாம் கட்ட வழங்கும் விழா பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள நேரு கலை அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பயனாளிகளுக்கு உரிமைத்தொகைக்கான ஆணைகளை வழங்கி வாழ்த்தினர். இவ்விழாவில் மொத்தம் 83,241 பயனாளிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.

News December 12, 2025

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி

image

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலுக்காக பயன்படுத்தப்பட உள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் FLC – முதல் நிலை சரிபார்த்தல் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மேற்பார்வையில், நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்துக் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!