News April 29, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 129
▶குறள்: தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
▶பொருள்: ஒருவருக்கு நெருப்பால் சுட்ட புண் கூட ஆறி விடும். ஆனால், வெறுப்பால் திட்டிய கடுமையான சொற்கள், ஆறாத வடு போல் மனதிலேயே இருக்கும்.
Similar News
News January 30, 2026
காங்கிரஸிடம் திமுக கெஞ்சுகிறது: EPS

ராகுல் காந்தி, கனிமொழியின் சந்திப்பை குறிப்பிட்டு திமுக கூட்டணியை EPS விமர்சித்தார். டெல்லியின் அடிமை அதிமுக அல்ல, திமுகதான் என்றும், இன்று காங்கிரஸிடம் கெஞ்சும் நிலைமைக்கு திமுக வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு திமுக செல்லும் நிலையை காங்கிரஸ் உருவாக்கியுள்ளதாகவும், அந்த கூட்டணி இருக்குமா இல்லையா என்ற தடுமாற்றம் வந்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.
News January 30, 2026
திருப்பதியில் முத்தம்.. மன்னிப்பு கேட்ட தம்பதி

திருப்பதியில் <<18991211>>போட்டோஷூட் <<>>எடுத்தபோது, முத்தமிட்ட திருவண்ணாமலையை சேர்ந்த திருமால், காயத்ரி தம்பதி தற்போது மன்னிப்பு கேட்டுள்ளனர். திருப்பதியில் போட்டோ, வீடியோ எடுப்பது தவறு என்று தெரியாது எனவும் அந்த போட்டோ & வீடியோக்களை டெலிட் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறிய அவர்கள், பரிகாரமாக திருப்பதியில் சேவை செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
News January 30, 2026
தமிழக வாக்காளர் பட்டியல்: அவகாசம் நீட்டிப்பு

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் SIR பணிகள் முடிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இன்றுவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், SC உத்தரவின்பேரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பிப்.9 வரை அவகாசத்தை நீட்டித்து ECI அறிவித்துள்ளது.


