News December 12, 2025

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

சேலம் மக்களே புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? அல்லது உங்க ரேஷன் கார்டுல பெயர் சேர்த்தல், செல்போன் நம்பர் மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமா? கவலை வேண்டாம் வரும் டிச.13ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்துத் தாலுகா அலுவலகங்களிலும் இதற்கான குறைதீர் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் கொள்ள மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 16, 2025

சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி, கட்டுமானம், நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். SHARE IT

News December 16, 2025

சேலம் சிறுவனை தொட்ட குற்றவாளிக்கு சிறை!

image

கடந்த 2020 ஆம் ஆண்டு கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கருணாமூர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றம் நடைபெற்று வந்த நிலையில் கருணாமூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்துள்ளது!

News December 16, 2025

சேலத்தில் பிரபல நடிகரின் செயல்!

image

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு பார்வையற்றோர் நடுநிலைப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான திருப்பாச்சி பெஞ்சமின் உணவு வழங்கினார்.அதனைத் தொடர்ந்து அங்குள்ள மாணவ மாணவிகளிடம், மாணவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

error: Content is protected !!