News December 12, 2025

பவானி அருகே அழுகிய நிலையில் மிதந்த சடலம்!

image

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோணவாய்க்கால் பகுதியில், காவிரி ஆற்றில் உடல் அழுகிய நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் உடலை மீட்டு உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 13, 2025

பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு!

image

ஈரோடு சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபண்ணாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான குண்டம் திருவிழா தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் 16 பங்குனி 2-ம் நாள் திங்கட்கிழமை பூச்சாட்டு விழா ஆரம்பம். முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா மார்ச் 31 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மறுபூஜை (6-4-26) அன்று நடைபெறவுள்ளது.

News December 13, 2025

ஈரோடு அருகே புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!

image

ஈரோடு அருகே உள்ள கீழ் திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார் (வயது 21) கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உறவினரான சுஜித்ரா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி இரவு மதன் குமார் விஷம் குடித்து மயங்கியர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 13, 2025

ஈரோட்டில் நாளை மறுநாள் மின்தடை: லிஸ்ட் இது தான் !

image

ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, பெருந்துறை, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், முகாசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், சிப்காட், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!