News December 12, 2025
நெல்லை: பைக்கில் தவறி விழுந்து இளைஞர் பலி

நெல்லை டவுணை அடுத்த பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஆனந்தராஜ் (18). இவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று காலை உயிரிழந்தார். பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 25, 2025
நெல்லை: VAO லஞ்சம் கேட்டா இதை பண்ணுங்க!

நெல்லை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462 – 2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News December 25, 2025
நெல்லை பெண்களே 1000 வரலையா? – CLICK HERE…!

நெல்லை பெண்களே, ரூ.1000 நீங்கள் பென்ஷன் பெறுகிறீர்கள், 4 சக்கர வாகனம் உள்ளது, வருமான வரி கட்டுகிறீர்கள் (அ) காரணம் ஏதும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு நீங்கள் சிரமப்படுத்துக் கடிதம் எழுத வேண்டியதில்லை. இங்<
News December 25, 2025
நெல்லை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க.


