News December 12, 2025
மதுரை: ஆற்றில் முதலை அச்சத்தில் மக்கள்

நரிக்குடி மக்களுக்கு டிச. 5ல் வைகை அணையில் இருந்து, 8 நாட்களுக்கு கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிக அளவு தண்ணீர் வரத்தால் கரை புரண்டு ஓடியது. இதனால் மானூர், மறையூர், வீரசோழன், பள்ளப்பட்டி பகுதிகளில் மீன் பிடிக்க ஏராளமானவர்கள் தூண்டில் போட்டு வருகின்றனர். அப்பாது உலக்குடி அருகே தண்ணீரில் முதலை தெரிந்தது.இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News December 13, 2025
மதுரை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலைச்சல் இல்லாமல் விண்ணப்பிக்க வழி உள்ளது.
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) எல்லோரும் பயனடைய SHARE பண்ணுங்க.
News December 13, 2025
நீதிபதி சுவாமிநாதனுக்கு மிரட்டல்; மதுரை எஸ்.பி.,யிடம் புகார்

பாரதிய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சத்திய சுபாஷ் அளித்த மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு நீதிபதி சுவாமிநாதனுக்கு முகநுால் (பேஸ்புக்) பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை எஸ்.பி., அரவிந்த்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
News December 13, 2025
மதுரை: 10th மாணவிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி கோபிநாயக்கன்பட்டியை சேர்ந்த தினகரன் (23), 10ம் வகுப்பு மாணவியை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். இது குறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து வாலிபர் தினகரனை இன்று கைது செய்தனர்.


