News December 12, 2025
கள்ளக்குறிச்சி: சிறுமியுடன் காதல் திருமணம்.. கணவருக்கு போக்சோ!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், பிரியாணி கடையில் மேலாளராக பணியாற்றி வரும் வாலிபரும் ஒரு வருடமாக காதலித்து இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இது தொடர்பாக மகளிர் ஊர் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில், குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News March 11, 2026
கள்ளக்குறிச்சி: பள்ளிக்கு சென்ற மாணவி திடீர் சாவு!

சங்கராபுரத்தை சேர்ந்த சவரிநாதனின் 4 வயது மகள், தனியார் பள்ளியில் UKG பயின்று வந்தார். நேற்று முன்தினம் சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை, பெற்றோர் தேற்றி பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். பள்ளியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 11, 2026
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (10.3.2026) இரவு முதல் நாளை (11.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News March 10, 2026
கள்ளக்குறிச்சியில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க.


