News December 12, 2025

BREAKING: ஈரோட்டில் விஜய்யின் நிகழ்ச்சிக்கு புது சிக்கல்!

image

வரும் 18-ம் தேதி, ஈரோட்டின் விஜயமங்கலம் டோல்கேட் அருகே விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இக்கூட்டம் நடைபெறும் இடம் HRCE-ன் கீழ் வரும் விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமானது என்பதால், அங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று கோயில் செயல் அலுவலர், மாவட்ட கலெக்டர் மற்றும் SP-யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் பொதுக்கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Similar News

News December 22, 2025

டிசம்பர் 22: வரலாற்றில் இன்று

image

*தேசிய கணித நாள்.
*1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில், உத்தராகண்டின் ரூர்க்கி நகரத்தில் இயக்கப்பட்டது.
*1887 – கணிதமேதை இராமானுஜன் பிறந்தநாள்.
*1964 – தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியை புயல் தாக்கியதில் 1,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

News December 22, 2025

புதுப்புது உக்திகளை கற்று வருகிறேன்: PV சிந்து

image

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் அனைவருக்கும் உண்டு, 100% தகுதியுடன் இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று PV சிந்து கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வளவு தான் அனுபவ வீராங்கனையாக இருந்தாலும் தொடர்ந்து புதுப்புது உக்திகளை கற்று வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதியிலேயே சிந்து வெளியேறியிருந்தார்.

News December 22, 2025

பெர்னாட் ஷா பொன்மொழிகள்

image

*நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
*உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது.
*பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியை போக்காது.
*எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர்.

error: Content is protected !!