News April 28, 2024
ORS கரைசலை எப்போதெல்லாம் அருந்தலாம்?

ORS கரைசல் என்பது உடலில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்யக் கூடியதாகும். சோடியத்துடன் குளுக்கோஸ் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் நீரில் கலந்து கொடுக்கும்போது உடல் உடனே உட்கிரகித்து கொள்கிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி இருப்பவர்களுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு அதிகம் ஏற்படும். இதனை தடுக்க ORS கரைசலை கொடுக்கலாம். மேலும் கோடைக் காலங்களில் ஏற்படும் நீர் வறட்சியைத் தடுக்கவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
Similar News
News August 14, 2025
யோகியை புகழ்ந்த MLA கட்சியில் இருந்து நீக்கம்

உ.பி. CM யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசியதற்காக, MLA பூஜாவை கட்சியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது. ரவுடிகளுக்கு எதிராக யோகி அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், தனது கணவரை கொன்ற தாதா ஆதிக் அகமதை புதைத்து தனக்கு நீதி கிடைக்க செய்ததாகவும் பூஜா கூறியிருந்தார். கடந்த 2005-ல், திருமணமான சிறிது நாள்களிலேயே பூஜாவின் கணவர் ராஜு சுட்டுக் கொல்லப்பட்டார்.
News August 14, 2025
மாஸ்டர் பட காட்சியை காப்பி அடித்த WAR 2..

லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்திற்கு போட்டியாக Jr.NTR-ன் ‘WAR-2’ திரைப்படமும் இன்று வெளியானது. படத்தில் Jr.NTR-ரும் ஹ்ரித்திக் ரோஷனும் சண்டையிடுவது போன்ற காட்சியை அமைத்திருக்கிறார் இயக்குநர் அயான். அக்காட்சி லோகேஷ் கனகராஜின் ’மாஸ்டர்’ படத்தில் கையில் காப்பு வைத்து விஜய்சேதுபதியை விஜய் தாக்கும் காட்சியை போல இருப்பதாகவும், ’WAR-2’ இயக்குநர் காப்பி அடித்துவிட்டதாகவும் கமண்ட்ஸ் வருகின்றனர்.
News August 14, 2025
Gpay, Phonepeல் இனி இந்த வசதி கிடையாது!

அவசர பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் போன் பண்ணி கடன் கேட்கத் தயங்குபவர்கள் கூட Gpay, Phonepe-ல் ஈசியாக MONEY REQUEST கொடுத்து வந்தனர். பணம் அனுப்பும் பகுதியில் REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவாம். இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது. வட போச்சே!