News April 28, 2024
அரை சதம் அடித்தார் மிட்செல்

SRH அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் CSK வீரர் மிட்செல் அரை சதம் அடித்துள்ளார். ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிவந்த அவர், தற்போது சரவெடியாக வெடித்துத் தள்ளி வருகிறார். மிட்செல் 51*, ருதுராஜ் 60* சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் CSK 13 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. CSK இதே வேகத்தில் சென்றால் எளிதாக 200 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 14, 2025
MGB கூட்டணியை தோல்விக்கு இட்டுச் சென்ற 5 விஷயங்கள்

*குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகள் மக்களை கவரவில்லை *கூட்டணியில் குழப்பம்- ஆர்ஜேடி, காங்., இடையே இருந்த தொகுதி உடன்பாடு சர்ச்சை தேர்தலில் எதிரொலித்துள்ளது *தன் பலத்தைவிட அதிகமான தொகுதிகளை காங்., பெற்றது *மிகப் பிற்படுத்தப்பட்டோர், தலித் வாக்காளர்களை யாதவ் லாபி புறக்கணித்தது. *ராகுலின் ‘வாக்கு திருட்டு’ பிரசாரம் உதவும் என அதிகமாக நம்பியது. உங்க கருத்து?
News November 14, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… இனிமேல் கிடைக்காது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இனிமேல் தகுதியான மகளிர் கூட விண்ணப்பிக்க முடியாது. அனைத்து மாவட்டங்களிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், மனுக்களை பரிசீலிக்கும் பணி நவ.30-ம் தேதிக்குள் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் தகுதியானோருக்கு டிச.15-ம் தேதி முதல் ₹1,000 டெபாசிட் செய்யப்படும்.
News November 14, 2025
கெத்தாக நிற்கும் நிதிஷ்குமார்

2025 பிஹார் தேர்தலின் நாயகன் என்றால் அது நிதிஷ்குமார்(74) தான். அவரின் JD(U) கட்சி 2015-ல் 71 இடங்கள் வென்ற நிலையில் 2020-ல் 43 ஆகச் சுருங்கியது. அடிக்கடி கூட்டணி மாறினாலும் 19 ஆண்டுகளாக CM பதவியை பிடித்துக் கொண்டிருக்கும் நிதிஷ் 9-வது முறையாக அரியணை ஏறப்போகிறார். ஆனால், இந்த முறை 80-க்கு மேற்பட்ட இடங்கள் வென்று கெத்தாக CM ஆகிறார். அனைத்து தரப்பினர் ஆதரவு, பெண்களிடம் செல்வாக்கு இவரது பெரும்பலம்.


