News December 12, 2025
தந்தை பெரியார் சமூக நீதி விருது விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்கள் இவ்விருதிற்கு
18.12.2025க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக 4வது தளம், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்
Similar News
News December 13, 2025
ஈரோடு:பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <
News December 13, 2025
பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு!

ஈரோடு சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபண்ணாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான குண்டம் திருவிழா தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் 16 பங்குனி 2-ம் நாள் திங்கட்கிழமை பூச்சாட்டு விழா ஆரம்பம். முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா மார்ச் 31 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மறுபூஜை (6-4-26) அன்று நடைபெறவுள்ளது.
News December 13, 2025
ஈரோடு அருகே புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!

ஈரோடு அருகே உள்ள கீழ் திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார் (வயது 21) கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உறவினரான சுஜித்ரா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி இரவு மதன் குமார் விஷம் குடித்து மயங்கியர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


