News December 11, 2025
தமிழகம் 100/100.. SIR படிவங்கள் பதிவேற்றம்

SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை டிச.14-ம் தேதி வரை EC நீட்டித்துள்ளது. இந்நிலையில், TN-ல் 100% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக EC அறிவித்துள்ளது. மொத்தம் 6.41 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவம் கொடுக்கப்பட்டதாகவும், பெரும்பாலானோர் படிவத்தை சமர்ப்பித்ததை தொடர்ந்து, விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக EC கூறியுள்ளது. இதையடுத்து டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
Similar News
News March 13, 2026
ரஜினியை யாரும் மிரட்ட முடியாது: ரகுபதி

திமுக மிரட்டியதன் காரணமாகவே ரஜினி அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜுனா வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். ரஜினியை யாரும் மிரட்ட முடியாது என்றும் எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக விஜய் கட்சியினர் அப்பட்டமான பொய்யை சொல்வதாகவும் சாடியுள்ளார். ரஜினி திமுகவின் நண்பர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 13, 2026
தமிழ்நாட்டை உலுக்கிய மரணம்: அடுத்த அதிர்ச்சி தகவல்

பென்னிக்ஸ் ஜெயராஜ், அஜித்குமாரை தொடர்ந்து ஆகாஷ் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆகாஷ் உடலில் 28 இடங்களில் காயம் இருந்ததாகவும், குறிப்பாக அவரின் மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரிடம் இருந்து ஆகாஷ் தப்பிக்க முயன்றபோது காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
News March 13, 2026
தமிழக தேர்தல் தேதி.. வெளியானது BIG UPDATE

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதிகளை நாளை மறுநாள்(மார்ச் 15) அறிவிக்க ECI திட்டமிட்டுள்ளதாம். நாளையுடன் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. இதனையடுத்து, தேர்தல் தேதியை CEC ஞானேஷ் குமார் அறிவிக்க உள்ளார். தமிழகத்திற்கு ஏப்.23-ம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


