News December 11, 2025
நீதிபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஸ்ரீதர் வேம்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில் நீதிபதியின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதற்காக அவரை குறிவைப்பது சரியல்ல என Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது மிரட்டலுக்கான அப்பட்டமான முயற்சி என்றும், இதை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 22, 2025
விஜய் Kutty Story-ல் சொன்ன அந்த கேரக்டர் யார்? DECODED

பைபிளில் வரும் யாக்கோபுவின் 12 மகன்களில் 11-வது மகன் தான் விஜய் குறிப்பிட்ட யோசேப் (ஜோசப்) கேரக்டர். தந்தை இவர்மீது காட்டிய அதீத அன்பை பார்த்து பொறாமைப்பட்ட சகோதரர்கள் இவரை அடிமையாக விற்றனர். இருந்தும் விடாமுயற்சியை கைவிடாத இவர், ஒருநாள் எகிப்தில் ஆளுநராகிறார். இறுதியில், தனக்கு தீங்கிழைத்த சகோதரர்களுக்கும் உதவுகிறார். இப்படியே தானும் உயர்வேன் என்பதை இக்கதையின் மூலம் விஜய் சுட்டிகாட்டுகிறார்.
News December 22, 2025
₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் கிடைக்கும் திட்டம்!

பெரிய ரிஸ்க் இல்லாத சிறிய முதலீடுகள் அல்லது சேமிப்புகளுக்கு அஞ்சலக RD ஒரு சிறந்த திட்டம். இதில் தினமும் ₹222 சேமித்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு சுமார் ₹4.5 லட்சம் கிடைக்கும். தொடர்ந்து 10 ஆண்டுகள் இதனை நீட்டித்தால் ₹11 லட்சம் வரை பெறலாம். இந்த கணக்கை தொடங்க, அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE.
News December 22, 2025
கையை கடிக்கும் செல்போன் ரீசார்ஜ்!

நமது 6-வது விரலாகவே செல்போன் மாறிவிட்டது. 4-6 பேர் கொண்ட குடும்பத்தில், செல்போன், Internet-க்கு சராசரியாக மாதம் ₹2000 வரை செலவாகிறது. நெட் பயன்படுத்தாத சில கிராமப்புற மக்கள் கூட மாதந்தோறும் மினிமம் ரீசார்ஜ் (₹200-₹300) செய்ய வேண்டியுள்ளது. அப்போதுதான் BANK, GAS உள்ளிட்ட OTP வரும். ₹30,000 சம்பாதிக்கும் குடும்பத்தில் 6% வரை இதற்கே செலவாகிறதாம். நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க?


