News December 11, 2025
T20 WC டிக்கெட்: சற்றுநேரத்தில் புக்கிங் தொடக்கம்

இந்தியாவில் டி20 உலகக் கோப்பை தொடர், பிப்.7-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டிக்கெட் புக்கிங், இன்று மாலை 6:45 மணிக்கு தொடங்குவதாக ICC கூறியுள்ளது. லீக் போட்டிகளுக்கான அடிப்படை டிக்கெட் விலை ₹100-ல் இருந்து ஆரம்பிக்கிறது. கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. நீங்க ஸ்டேடியத்தில் லைவ் மேட்ச் பார்த்தது உண்டா?
Similar News
News December 13, 2025
பாஜகவுக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுப்பதே திமுக தான்: சீமான்

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு பாஜக, திமுகவே காரணம் என சீமான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், பாஜகவுக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுப்பதே திமுக தான் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கருணாநிதிக்கு ஏன் விழா எடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், பாரதிக்கு விழா எடுக்க வேண்டியது தானே என்றும் கேட்டுள்ளார். மேலும், பாஜக வளர்ந்ததற்கு காரணமே கருணாநிதி தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News December 13, 2025
சிகரெட்டை விட இது ரொம்ப டேஞ்சர்.. உடனே கவனியுங்க!

உடல் பருமனாக இருப்பதால், 13 வகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியம் (கருப்பையின் உட்புற திசு), உணவுக்குழாய், பித்தப்பை, இரைப்பை, சிறுநீரகம், கல்லீரல், கருப்பை, கணைய, தைராய்டு, எலும்பு மஜ்ஜை & மூளையில் உள்ள மெனிஞ்சியோமா ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படலாம் என்கின்றனர். எனவே, உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வெச்சிக்கோங்க!
News December 13, 2025
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

EX மத்திய அமைச்சர் குசுமா கிருஷ்ணமூர்த்தி(85) டெல்லியில் மாரடைப்பால் காலமானார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஒருங்கிணைந்த ஆந்திராவின் அமலாபுரம் தொகுதியில் 3 முறை எம்பியாக தேர்வானவர். 1990-ம் ஆண்டு மத்திய பெட்ரோலியம் மற்றும் ரசாயன துறையின் அமைச்சராக பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர், SC & ST தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். #RIP


