News December 11, 2025

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய் முடிவு

image

<<18532516>>கூட்டணிக்கான பேச்சுவார்த்தை சிறப்பு குழுவை<<>> அமைத்துள்ள தவெக, விஜய்யை CM வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம், அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. NDA கூட்டணியின் CM வேட்பாளராக EPS இருப்பது குறிப்பிடத்தக்கது. தவெக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என நீங்க நினைக்கிறீங்க?

Similar News

News December 20, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. வந்தாச்சு HAPPY NEWS

image

TN-ல் பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், அடுத்த வாரத்தில் இதுகுறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் டோக்கன் வழங்கி பொருள்களை விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளதாம்.<<18619340>> ₹3,000 <<>>உடன் பொங்கல் தொகுப்பு வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

News December 20, 2025

மத உணர்வை தூண்டினால் கவனமாக இருங்கள்: CM

image

தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்வதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அவர், ஒற்றுமையாக வாழும் மக்களை சிலர் பிரிக்க நினைப்பதாகவும், மதத்தின் பெயரால் ஒருவர் உங்களது உணர்வுகளை தூண்டினால், அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்புவோருக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

News December 20, 2025

கார் விபத்தில் சிக்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

image

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. மத்திய கைலாஷ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் மீது சிவகார்த்திகேயனின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

error: Content is protected !!