News December 11, 2025

மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களை பாராட்டு

image

(டிச.11) விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களை பாராட்டி ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மருத்துவர்களுக்கு கேடயத்தினை வழங்கினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன் இந்த நிகழ்வில் இருந்தனர்.

Similar News

News December 15, 2025

விழுப்புரத்தில் ஆட்சிமொழிச் சட்டவார விழா

image

தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் ஆட்சி மொழிச் சட்டவார விழா வரும் 17.12.2025 வரை 26.12.2025 விழுப்புரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விழாவில் ஆர்வமுள்ள மாணவர்கள், மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

News December 15, 2025

விழுப்புரம்: மடிக்கணினி திட்டம் – ஆட்சியர் ஆலோசனை

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (15.12.2025) நடைபெற்றது. இதில், திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில் வடிவு உட்பட பலர் பங்கேற்றனர்.

News December 15, 2025

விழுப்புரம்: வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (15.12.2025) நடைபெற்றது. உடன் திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில்வடிவு, விழுப்புரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி, வங்கி மேலாளர் நாசர் உட்பட பலர் உள்ளனர்.

error: Content is protected !!