News April 28, 2024
ராகுல் காந்தி இந்துக்களை வெறுக்கிறார்

ராமர் கோவில் திறப்பு விழாவைப் புறக்கணித்த ராகுல் காந்தி, இந்துக்களை வெறுக்கிறார் என எல்.முருகன் சாடியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற இந்துக்களின் 500 ஆண்டுக்காலக் கனவு நிறைவேறியுள்ளது என்றார். மேலும், அந்தக் கோவிலுக்கு ஒருமுறை கூடச் சென்று வழிபாடு நடத்தாத ராகுல் காந்தி ராமரையும், இந்துக்களையும் வெறுக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது என விமர்சித்துள்ளார்.
Similar News
News February 6, 2026
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்!

தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும் *பெண்களின் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது * நிலத்தை பயன்படுத்தும் உழவனிடமும், கல்லுடைக்கும் தொழிலாளியிடமும் இறைவன் இருக்கிறான்.
News February 6, 2026
கோடிகளில் சம்பாதித்தாலும் சந்தோஷம் இல்லை: அனிருத்

கோலிவுட்டில் ஒரு படத்திற்கு இசையமைக்க ₹8 முதல் ₹10 கோடி சம்பளம் வாங்குபவர் அனிருத். இந்நிலையில், சிறுவயதில் கல்யாணங்களுக்கு வாசிக்க சென்ற போது ₹500 சம்பளம் தருவார்கள் என்ற அவர், சில சமயங்களில் வெற்றிலை பாக்கு கொடுத்து நன்றிகூறி வீட்டுக்கு அனுப்புவார்கள். ₹500 ரூபாய் பெற்ற போது கிடைத்த சந்தோஷம், தற்போது கோடிகளில் சம்பாதித்தாலும் கிடைப்பதில்லை என அனிருத் வருந்தியுள்ளார்.
News February 6, 2026
இந்தியா, US வர்த்தக டீல்.. இறுதி முடிவு

இந்தியா, US வர்த்தகத்தின் சட்டப்பூர்வ ஒப்பந்தமானது மார்ச் மாதத்தில் கையெழுத்தாகும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுபற்றிய இருநாடுகளின் கூட்டறிக்கை அடுத்த 4-5 நாள்களில் வெளியானவுடன் அதிபர் டிரம்ப் அரசாணை பிறப்பிப்பார் என்ற அவர், தற்போது உள்ள 50% வரி 18% ஆக குறைக்கப்படும் எனக் கூறினார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப ₹45 லட்சம் கோடிக்கு US பொருள்கள் வாங்கப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.


