News December 11, 2025

தவெக பரப்புரையில் வைரலான பெண் எஸ்பிக்கு கெளரவம்

image

புதுச்சேரி தவெக மக்கள் சந்திப்பின்போது, ஒரு டோக்கனுக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஒரு டோக்கனுக்கு இருவரை அனுமதிக்குமாறு புஸ்ஸி ஆனந்த் போலீஸிடம் வலியுறுத்தினார். அதற்கு, <<18511098>>SP ஈஷா சிங்<<>> ஆவேசமாக எச்சரித்தது கவனம் ஈர்த்தது. இந்நிலையில், விஜய் பரப்புரையில் சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக ஈஷா சிங்கிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளார்.

Similar News

News December 21, 2025

மீண்டும் தெலுங்கில் ரீரிலீஸாகும் தனுஷின் 3

image

2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் 2026, பிப்.6-ல் தெலுங்கில் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2022-ல் தெலுங்கிலும், 2024-ல் தமிழிலும் இப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இதனால், ஒரு படம் 3-வது முறையாக ரீரிலீஸ் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். உங்களுக்கு இப்படத்தில் பிடித்த சீன் எது?

News December 21, 2025

BDS அட்மிஷனில் முறைகேடு: ராஜஸ்தான் அரசுக்கு அபராதம்

image

2016 – 17-ல் ராஜஸ்தானில் உள்ள 10 மருத்துவ கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு பர்சண்டைல் முறைகேடாக குறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், விதிமீறல் நிரூபணமானதாக கூறி, 10 கல்லூரிகளுக்கும் தலா ₹10 கோடி அபராதம் விதித்து SC உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், இந்த முறைகேட்டை அனுமதித்ததற்காக ராஜஸ்தான் மாநில அரசுக்கும் ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News December 21, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 556 ▶குறள்: மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. ▶பொருள்: ஆட்சியாளருக்கு புகழ் நிலைத்திருக்க காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

error: Content is protected !!