News December 11, 2025
தேனி: கஞ்சா வழக்கில் பெண் மீது குண்டாஸ்

தேவாரத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கடந்த மாதம் ரோந்து சென்றனர். அப்போது ஆந்திராவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர். மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேனி கலெக்டர் உத்தரவிட்ட நிலையில் நிவேதா, விக்னேஷ், சக்தி ஆகிய 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News December 15, 2025
தேனி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

தேனி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் இங்கு <
News December 15, 2025
தேனி: இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் வாக்குமூலம்!

தேவாரம் முத்தையன்செட்டிபட்டியை சேர்ந்த தம்பதியர் பிரதீப், நிகிலா. குடும்ப பிரச்சனை காரணமாக நிகிலா, மனைவியின் சகோதரர் விவேக் இருவரையும் கணவர் பிரதீப் டிச.11ம் தேதி வெட்டி படுகொலை செய்தார். கொலை வழக்கில் பிரதீப் அவரது தந்தை சிவகுமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே போலீசாரிடம் எங்களது குடும்பத்தை அவதூறாக பேசியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
News December 15, 2025
தேனியில் மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (32). இவா் போடி மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு கடுமையாக அவதிப்பட்டுள்ளார். இதனால், மனமுடைந்த ஜெயச்சந்திரன் நேற்று (டிச.14) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


