News December 11, 2025
யூடியூப்பை பார்த்து ஆபரேஷன்.. பெண் துடிதுடித்து மரணம்!

உ.பி.,யில் மனைவி வயிற்று வலியால் துடிக்க, கணவர் கிளினிக் ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறார். கிட்னியில் கல் இருப்பதாக கூறிய டாக்டர்கள், அவருக்கு ஆபரேஷன் செய்கின்றனர். youtube பார்த்து சிகிச்சை செய்த டாக்டர் பிரகாஷ், மதுபோதையில் அப்பெண்ணின் வயிற்று நரம்புகளை துண்டிக்க, அவர் உயிரிழந்துள்ளார். ஃபீஸாக ₹20,000 பணத்தையும் கொடுத்து, மனைவியையும் இழந்து தவிக்கிறார் கணவர். டாக்டர்களே இப்படி இருந்தால்…?
Similar News
News December 24, 2025
இபிஎஸ்-க்கு சசிகலா ஆதரவா?

MGR நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா, உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், EPS-ன் தலைமை சரியில்லை என OPS, TTV விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அக்கருத்தை ஏற்காத அவர், மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். இது மறைமுகமாக EPS-க்கு ஆதரவு நிலைப்பாடு என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News December 24, 2025
முருகனாக மாறும் அல்லு அர்ஜுன்!

இது சாமி படங்களின் சீசன் போல. மூக்குத்தி அம்மன், Hanu-Man, காந்தாரா, ராமாயணா படங்களை தொடர்ந்து தமிழ் கடவுளான முருகனின் வரலாறும் திரையில் மிளிர உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் முருகனாக நடிக்கவுள்ளாராம். இவர்கள் கூட்டணியில் வெளியான, ‘அலா வைகுண்டபுரமுலோ’ படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. Gen Z கிட்ஸை முருகன் கவருவாரா?
News December 24, 2025
இளைஞர்களுக்கு மாதம் ₹12,500 வழங்கும் TN அரசு!

நீயே உனக்கு ராஜா திட்டத்தின் மூலம், கலையில் ஆர்வமுள்ள இளைஞர்களை கலைத் தொழில்முனைவோர்களாக மாற்ற இலவச பயிற்சியும், சம்பளமும் தமிழக அரசு தருகிறது. https://candidate.tnskill.tn.gov.in/Art/ArtRegistration/Registration/ -க்கு சென்று, தகவல்களை உள்ளிடுக. இதில் தேர்வு செய்யும் Skill-க்கான 3 மாத இலவச பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்த கையோடு வேலையும், மாதம் ₹12,500 சம்பளமும் கிடைக்கும். SHARE IT.


