News December 11, 2025
புதுவை: போலி மருந்து வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரண்

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளர் ராஜா மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய விவேக் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடியாக இருவரும் சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 17, 2025
புதுச்சேரி மாநில காவல்துறை மாநாடு

புதுவை மாநில காவல் துறை மாநாடு இன்று ராஜீவ்காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் அனைத்து காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். முதல்வர், மாநாட்டை குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்து மற்றும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
News December 17, 2025
புதுவை: டிப்ளமோ போதும் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்படியாக 40
4. சம்பளம்: ரூ.16,338 – 29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
புதுச்சேரியில் பென்ஷன் சங்கத்தினர் போராட்டம்

புதுச்சேரியில் பென்ஷன் சங்கம் சார்பில் இன்று சுதேசி பஞ்சாலை அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு பென்ஷன் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்; அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பாரபட்சமின்றி ஒன்று முதல் எட்டாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.


