News December 11, 2025
அமித்ஷா மன அழுத்தத்தில் உள்ளார்: ராகுல் காந்தி

லோக்சபாவில் நேற்று நடந்த SIR குறித்த விவாதத்தின் போது <<18524191>>ராகுல், அமித்ஷா இடையே<<>> வார்த்தை மோதல் வெடித்தது. இந்நிலையில் அமித்ஷா மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை நேற்று நாடே பார்த்ததாக ராகுல் தெரிவித்துள்ளார். விவாதத்தின் போது பதற்றமாக இருந்ததால் அமித்ஷாவின் கைகள் நடுங்கியதாகவும், தகாத வார்த்தைகளை அவர் பேசியதாகவும் ராகுல் விமர்சித்துள்ளார். தனது சவாலுக்கு அமித்ஷா பதில் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
Similar News
News December 21, 2025
டிரம்ப் போட்டோ மாயம்!

ஜெஃப்ரி <<18548710>>எப்ஸ்டீன்<<>> தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் டிரம்ப், பில் கிளிண்டன், பில் கேட்ஸ் போன்ற பல பிரபலங்களின் போட்டோக்கள் இருந்தன. ஆனால், வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் டிரம்ப் இருக்கும் போட்டோ உள்ளிட்ட 16 முக்கிய கோப்புகள் இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆவணங்கள் ஏன் நீக்கப்பட்டன என ஜனநாயக கட்சியினர் கொந்தளித்து வருகின்றனர்.
News December 21, 2025
விஜய் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ள நிலையில், மறுபுறம் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில், தவெகவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், கோவை வடக்கு மாவட்ட பாஜக, சமூக ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
News December 21, 2025
கண்ணில் மிளகாய் பொடி தூவி மாணவனுக்கு சித்ரவதை!

கர்நாடகா, பாகல்கோட் பகுதியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவனிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி பள்ளியில், 16 வயது சிறுவனை Plastic pipe-ஆல் அடித்து, கண்ணில் மிளகாய் பொடியை தூவி சித்ரவதை செய்துள்ளனர். தன்னை காக்க முடியாத அச்சிறுவனை நினைத்து பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. ஏன் ஆசிரியர்கள் இவ்வாறு செய்தார்கள் என்பது தெரியாத நிலையில், விசாரணை நடந்து வருகிறது.


