News December 11, 2025
குமரி: பைக் மோதி மூதாட்டி பலி

ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம்மாள் (70). இவர் ராமன் புதூர் மீன் சந்தையில் மீன் வாங்கிவிட்டு பஸ் ஏறுவதற்காக ரோட்டை கடக்கும் போது அந்த வழியாக சென்ற பைக் அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த ஞானம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் நேற்று (டிச.10) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
குமரியில் நாளை மின்தடை அறிவிப்பு!

மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (டிச.17) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கோட்டார், இடலாகுடி, கணேசபுரம், பறக்கை ரோடு, ஓழுகினசேரி, வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம், வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம், தளவாய் தெரு, பத்தல்விளை, வேப்பம்மூடு, பெருமாள் மண்டபம் சாலை, மீனாட்சி கார்டன் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
குமரி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க
News December 15, 2025
குமரியில் மின் கம்பியாள் தேர்வு தள்ளிவைப்பு -ஆட்சியர் தகவல்

குமரி மாவட்டத்தில் 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் தேர்வு நடைபெறம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் அரசு தொழிற் பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் வைத்து நடைபெறம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தகவல் தெரிவித்துள்ளார்.


