News December 11, 2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் சீல் வைத்து பாதுகாக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறனர். வாக்கு இயந்திரங்களின் செயல்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆராய்ந்தனர். கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
கள்ளக்குறிச்சி: பள்ளியில் மாணவியை கடித்த பாம்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நவீதா (7) இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி வளாகத்தில் சக மாணவர்களுடன் நவீதா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் பாம்பு கடித்தது. தொடர்ந்து, ஆசிரியர்கள், நவீதாவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவி நவீதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News December 17, 2025
பனீர் சாப்பிட பிடிக்குமா.. கொஞ்சம் கவனியுங்க!

இந்தியாவில் 83% போலியான பனீரே விற்கப்படுகின்றன என்ற ஷாக்கிங் தகவலை FSSAI தெரிவித்துள்ளது. இது மைதா, ArrowRoot powder, Urea ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறதாம். பனீரின் மீது Iodine Tincture-ஐ விடும் போது, அது கருப்பாக மாறினால், அது போலியானது. அதுவே ஒரிஜினலாக இருந்தால், அது பனீர் மீது படிமமாக தேங்கி நின்றுவிடும். குடல், கிட்னி போன்றவற்றுக்கு இந்த போலி பனீர் பிரச்னையை உண்டாக்குமாம்.
News December 17, 2025
2026-ல் எந்தெந்த தொகுதிகள்.. பாஜக முக்கிய முடிவு

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடுகிறது. இக்கூட்டத்தில், பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுவது, வார்டு வாரியாக மக்கள் சந்திப்பை நடத்துவது உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நயினார், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.


