News April 28, 2024
நாமக்கல் பழக்கடைகளில் திடீர் சோதனை

நாமக்கல் மாவட்டத்தில், பல இடங்களில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருணன் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ப.வேலூரில் நடைபெறும், இன்று ஞாயிற்றுக்கிழமை வார சந்தையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ரசாயன பழங்களை அழித்தனர்.
Similar News
News August 19, 2025
நாமக்கல்: முட்டை விலை உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4.95 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 5.00 காசுகளாக அதிகரித்து உள்ளது. முட்டை விலை உயர்வடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News August 19, 2025
நாமக்கல்: அரசு அதிகாரியாக விருப்பமா? APPLY NOW!

நாமக்கல் மக்களே.. Income Tax காலியாக உள்ள 386 Legal Assistant, Accounts Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News August 19, 2025
முட்டை கோழி விலை கிலோவுக்கு ரூ. 2 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.99 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.