News April 28, 2024

கடலூரில் நீச்சல் வகுப்பு துவக்கம்

image

கடலூர், அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2ஆம் கட்ட நீச்சல் வகுப்புகள் கடந்த 16ஆம் தேதி துவங்கி இன்று நிறைவடைந்தது. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30ஆம் தேதி முதல் மே மாதம் 12ஆம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

Similar News

News February 18, 2026

கடலூர்: தலை நசுங்கி ஒருவர் பலி

image

விருத்தாசலம் – தொழுதூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கணூர் அருகே நேற்று (பிப்.17) 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி தலையில் ஏறியதால், சம்பவ இடத்திலே தலை நசுங்கி பலியானார்.மேலும் படுகாயத்துடன் 2 பேர் பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 18, 2026

கடலூர்: கவுன்சிலரின் மனைவி தற்கொலை – போலீஸ் விசாரணை

image

விருத்தாசலம் ஆயியார் மடத்தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. தேமுதிக நகர பொருளாளரான இவர், விருத்தாசலம் நகரமன்ற கவுன்சிலராகவும் உள்ளார். இவரது மனைவி சத்யாவுக்கு(38) அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்யா வீட்டில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 17, 2026

கடலூரில் இயல்பை விட அதிகம் பெய்த மழை!

image

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 17ம் தேதி வரை இயல்பாக 34.3 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இன்று வரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மழை இயல்பை விட 7 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று (பிப்.17) அறிவித்துள்ளது.

error: Content is protected !!