News December 11, 2025
கரூர்: ரூ.18,000 சம்பளத்தில் ஆசிரியர் வேலை! APPLY NOW

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் <
Similar News
News March 8, 2026
கரூரில் இருந்து விலகுகிறார் செந்தில் பாலாஜி?

கோவை மண்டல திமுக பொறுப்பாளராகச் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக அபார வெற்றி பெற்றது. இதனால் வரும் தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமெனப் பல நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர் கோவை அல்லது கரூர் என எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?
News March 8, 2026
கரூரில் மனைவி, மகள் கழுத்தறுத்துக் கொலை! JUDGMENT

கரூரில் கடந்த 2024-ம் ஆண்டு, குடும்பத் தகராறில் மனைவி கல்பனா மற்றும் 5 வயது மகள் சாரதிபாலாவைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தொழிலாளி செல்வகணேஷிற்கு(46), கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. ஆத்திரத்தில் கொடூரச் செயலைச் செய்த செல்வகணேஷை, நீதிபதி தங்கவேல் குற்றவாளி என உறுதி செய்து இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
News March 8, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.7) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


