News December 11, 2025

திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருப்பூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 21, 2025

பல்லடம் அருகே சோக சம்பவம்!

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் செயல்பட்டு வரும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளராக இருப்பவர் தனராஜசேகர். இவர் கல்லூரியில் உள்ள சிறு சிறு விவசாய வேலை செய்து கொண்டிருந்தபோது, புல் அரக்கும் எந்திரம் உடலில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 21, 2025

திருப்பூருக்கு பெருமை: தட்டித்தூக்கிய நிறுவனங்கள்!

image

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பாக, நாடு முழுவதும் ஜவுளி ஏற்றுமதியில் சிறந்த நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழா, டெல்லியில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பூரைச் சேர்ந்த 11 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக ஏற்றுமதி, சிறந்த செயல் திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

News December 21, 2025

மூலனூர்–தாராபுரம் சாலையில் இருசக்கர வாகன விபத்து

image

திருப்பூர் மாவட்டம் டிசம்பர் 20 இன்று விபத்து .விபத்தானது மூலனூர் டு தாராபுரம் சாலை தனியார் ஸ்பேர் பார்ட்ஸ் கடை அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயம். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் ஏற்றி மூலனூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் யார் என்று விவரம் தெரியவில்லை .மூலனூர் காவல்துறை விசாரணை

error: Content is protected !!