News December 11, 2025
விஜய்யின் ஆசைக்கு அளவில்லை: கோவி.செழியன்

தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். விஜய்யின் பேச்சு, ‘கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன்’ என்பது போன்று இருந்ததாகவும் அவர் விமர்சித்தார். மேலும், ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News December 17, 2025
ஓமனில் PM மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

எத்தியோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு PM மோடி, ஓமனுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் தனது X பதிவில், ஓமன் இந்தியாவுடன் ஆழமான வரலாற்று தொடர்புகளைக் கொண்ட நிலம் என பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பயணம், இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும், கூட்டாண்மைக்கு உத்வேகத்தை சேர்க்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
BREAKING: கட்டணம் உயர்வு.. மக்களுக்கு அதிர்ச்சி

ரயிலில் லக்கேஜ்களுக்கான கட்டணம் உயர்கிறது. குறிப்பிட்ட எடையை தாண்டி லக்கேஜ்களை பயணிகள் தங்களுடன் கொண்டுவந்தால், ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். Second Class: 35 – 70. ஸ்லீப்பர் (SL): 40 – 80 kg, ஏசி 3 டயர்/ சேர் கார்: 40 kg, ஃபர்ஸ்ட் கிளாஸ் & ஏசி 2 டயர்: 50 – 100 kg, ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ்: 70 – 150 kg வரை கூடுதல் கட்டணமின்றி கொண்டு செல்லலாம்.
News December 17, 2025
AI போட்டோவால் வருந்திய ஸ்ரீலீலா

நடிகை ஸ்ரீலீலா, SM-யில் தனது AI புகைப்படம் வெளியானது தன்னை காயப்படுத்தியதாக மிகவும் வருந்தியுள்ளார். இதுகுறித்து அவர், தவறான நோக்கங்களுக்காக AI பயன்படுத்துவதை யாரும் ஆதரிக்க வேண்டாம். இதுபோன்ற மேம்பட்ட தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டுமே தவிர, சிரமங்களை உண்டாக்கக் கூடாது. இந்த AI பெண்களை குறிவைத்து தவறாகப் பயன்படுத்துவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


