News December 11, 2025
புதுவை: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….
Similar News
News December 26, 2025
புதுச்சேரி: புத்தாண்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. இதில் போலீஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் நகர பகுதியில் குடிநீர், கழிப்பறை வசதி அமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் கண்காணிப்பை பலப்படுத்தவும், மக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் கூறியுள்ளார்.
News December 26, 2025
புதுவை ரெயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரெயிலில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். எஸ் 1 பெட்டியில் பிளாஸ்டிக் சணல்’ பை ஒன்று கிடந்தது. அதை திறந்து பார்த்த போது 4 மூட்டைகளில் 8 கிலோ கஞ்சா இருந்தது. இதுகுறித்து ஓதியஞ்சாலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கஞ்சாவை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
News December 25, 2025
புதுச்சேரி: இந்திய தலைவர் முதல்வருக்கு வாழ்த்து

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமியை, அவரது இல்லத்தில் மகாத்மா காந்திய அமைப்பின் அகில இந்திய தலைவர் சங்கர்குமார் சந்யால் மற்றும் அதன் செயலாளர் சஞ்சய்ராய் ஆகியோர் மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அருகில் தமிழகத் தலைவர் மாருதி, சமூக சேவகர் ஆதவன் உள்ளார்.


