News December 11, 2025
தூத்துக்குடி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

தூத்துக்குடியில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
Similar News
News December 17, 2025
தூத்துக்குடி: ரூ.10 லட்சம் பரிசு.. கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசு மஞ்சப்பை விருதுகளை அறிவித்துள்ளது. தங்கள் வளாகத்தில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை தவிர்த்து வரும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு விருது மற்றும் முதல் பரிசாக ரூ.10,00,000, 2ம் பரிசாக ரூ.5,00,000, 3ம் பரிசாக ரூ.3,00,000 பரிசு வழங்கப்படும். மாவட்ட அலுவலக இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி ஜன.15-க்குள் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஓர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இன்று (டிச.17) கோரம்பள்ளம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், காவல் நிலையங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் மனுக்கள் மற்றும் பிற மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 16, 2025
பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு பாஜக கண்டனம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு கல்குவாரியில் வேலை தேடி வந்த அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு ஆகிவிட்டது என்பதை மீண்டும் ஒருமுறை இச்சம்பவம் நிரூபித்துள்ளது. காட்டுமிராண்டித்தனமான இச்செயலுக்கு வெட்கி தலை குனிய வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கன் தெரிவித்துள்ளார்.


