News December 11, 2025
நாமக்கல்லில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

நாமக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.12) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை, வளையப்பட்டி, குரும்பப்பட்டி, என்.புதுப்பட்டி ,நல்லுார், மேட்டுப்பட்டி, திப்ரமகாதேவி, வாழவந்தி, வடுகப்பட்டி, ரெட்டையாம்பட்டி, மோகனுார், ஜம்புமடை, ஒருவந்துார், செவந்திப்பட்டி, அரூர்மேடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
Similar News
News December 20, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (19.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பு..!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. இதுவரை காணாத உச்ச நிலையில் முட்டை விலை தொடர்ந்து நீடிப்பதால் பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News December 19, 2025
BREAKING: நாமக்கல்லில் 1 லட்சம் வாக்களர்கள் நீக்கம்!

SIR பணிகளைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி இன்று வெளியிட்டுள்ளார். நாமக்கல் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் இறந்த வாக்காளர்கள்,வேறு முகவரிக்கு குடிபெயர்ந்த வாக்காளர்கள், இரட்டை பதிவுகள் கொண்ட வாக்காளர்கள், மற்ற இனங்கள் என ஆக மொத்தம் 1,93,706 வாக்குகாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக குமாரபாளையம் தொகுதியில் 20.07 சதவீதம் நீக்கப்பட்டுள்ளனர்.


