News April 28, 2024
அடுத்தடுத்து இரண்டு பேர் அரை சதம்

RCB அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் வீரர்கள் அடுத்தடுத்து அரை சதம் அடித்து அசத்தியுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்களான சாஹா (5), கில் (16) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து கூட்டணி அமைத்த ஷாருக் கான், சாய் சுதர்சன் RCBயின் பவுலிங்கை நாலாப்பக்கமும் சிதறடித்தனர். ஷாருக் கான் 58 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த நிலையில், சாய் சுதர்சன் 74* ரன்களுடன் ஆடி வருகிறார்.
Similar News
News August 16, 2025
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

இந்த ஆண்டு தீபாவளி வரும் அக்.20-ம் தேதி திங்கள்கிழமை வர உள்ளது. ஆகவே, முந்தைய வாரத்தின் சனி, ஞாயிறு என 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அந்த வகையில், அக்.17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் திங்கள் காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதால், சொந்த ஊர் செல்வோர் பயன்படுத்தி கொள்ளவும். அக்.18-ம் தேதிக்கான புக்கிங் செவ்வாய், 19-ம் தேதிக்கு புதன், 20-ம் தேதிக்கு வியாழன் காலை 8 மணிக்கு தொடங்கும்.
News August 16, 2025
₹8,700 கோடி நஷ்ட ஈடு கேட்கும் மெலனியா டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக, தற்போதைய அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு எதிராக ஹண்டர் பைடன் அவதூறு பரப்பியதாக கூறி ₹8,700 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தான் டிரம்ப்பிற்கு மெலனியாவை அறிமுகப்படுத்தியதாக ஹண்டர் பேசியிருந்தார்.
News August 16, 2025
ராசி பலன்கள் (16.08.2025)

➤ மேஷம் – நலம் ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – நற்செய்தி ➤ கடகம் – தடங்கல் ➤ சிம்மம் – ஆர்வம் ➤ கன்னி – சாந்தம் ➤ துலாம் – செலவு ➤ விருச்சிகம் – குழப்பம் ➤ தனுசு – வெற்றி ➤ மகரம் – விவேகம் ➤ கும்பம் – இரக்கம் ➤ மீனம் – இன்பம்.