News December 11, 2025

குமரி மாவட்டத்தில் இன்று எங்கெல்லாம் மின்தடை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (11.12.2025) செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், திரவியம் மருத்துவமனை, லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை இதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளவும். *பிறருக்கும் ஷேர் செய்யுங்கள்*

Similar News

News December 25, 2025

ரெயில் மீது கல்வீசிய சிறுவன் கைது

image

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

News December 25, 2025

கன்னியாகுமரியில் மட்டும் 23,043 பேர் பாதிப்பு

image

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 25, 2025

குமரியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த சடலம்!

image

குழித்துறை ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் நேற்று சுமார் 45 வயது நபர் ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்தவர் கையில் தேர்தலுக்கு வாக்களித்த மை காணப்பட்டதால் கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தவராக இருக்கலாம் என போலீசார் கூறினர்.

error: Content is protected !!