News December 11, 2025
டி20-ல் ஆதிக்கத்தை தொடருமா இந்தியா?

IND vs SA இடையிலான 2-வது டி20 இன்று நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது. அதை இன்றைய போட்டியிலும் தொடருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், படுமோசமான தோல்வியை சந்தித்த SA, பழிவாங்க முயற்சிக்கும் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில், 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.
Similar News
News December 12, 2025
மேகதாது அணை: குழுவை அமைத்தது கர்நாடகா

மேகதாது அணை திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள 30 அதிகாரிகள் கொண்ட குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது. முன்னதாக, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு SC அனுமதி அளித்தது. அத்துடன், தமிழக அரசின் கருத்தை கேட்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News December 12, 2025
NDA கூட்டணியில் இந்த கட்சிகள் சேரலாம்: அண்ணாமலை

NDA கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது பற்றி தேசிய பாஜக தலைமை, EPS, நயினார் ஆகியோர் இணைந்து முடிவெடுப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். TTV, OPS உடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்ற அவர், இருவரையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தமிழக NDA தலைவர் EPS முடிவெடுப்பார் என்றார். மேலும், தங்கள் கூட்டணியில் தேமுதிக, பாமகவையும் இணைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
News December 12, 2025
TNPSC குரூப் 4 காலியிடங்கள் 4,400 ஆக அதிகரிப்பு

2026-ல் நடைபெறவுள்ள <<18460223>>TNPSC குரூப் 4<<>>-க்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு அக்.6-ல் வெளியாகவுள்ளது. இதனையடுத்து டிச.20-ல் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4,000 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக 400 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 4,400 காலிப்பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் அடுத்த ஆண்டு நிரப்பப்படவுள்ளது.


