News December 11, 2025

இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி

image

இராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடந்தும் இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி நடத்தப்பட உள்ளது. வருகின்ற டிச- 19-ம் தேதி முதல் 29ம் தேதி வரை, காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.மேலும், தகவலுக்கு 9087260074,8056771986 என்ற எண்களை தொடர்புக் கொள்ளவும். *SHARE

Similar News

News December 25, 2025

இராம்நாடு: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

image

வாலிநோக்கம் அருகே உள்ள தத்தங்குடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சின்னதுரை(எ)சதீஷ்குமார் (20) என்பவர் கஞ்சா செடி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் படி, வாலிநோக்கம் காவல் ஆய்வாளர் லட்சுமி, சார்பு ஆய்வாளர் ரத்தினவேல் ஆகியோர்கள் சென்று அவரது வீட்டை சோதனை செய்ததில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து அதனை பிடுங்கி வைத்திருந்ததை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 24, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 பேர் மீது குண்டாஸ்.!

image

தேவிபட்டினத்தில் 4 பேரை கொல்ல முயன்ற சரத்குமார் மீது தேவிபட்டினம் போலீஸ் வழக்கு பதிந்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இவர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு எஸ்.பி சந்தீஷ் பரிந்துரைபடி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சரத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார். நடப்பாண்டில் இதுவரை மாவட்டத்தில் 50 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News December 24, 2025

ராமநாதபுரம்: சுகாதாரத்துறையில் வேலை; APPLY NOW!

image

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து முழுவிவரங்களை தெரிந்து கொண்டு ஜன.7 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!