News April 28, 2024

ரத்னம் படத்திற்கு போதிய வரவேற்பில்லை

image

இயக்குநர் ஹரியுடன் விஷால் மூன்றாவது முறையாகக் கூட்டணியமைத்த ‘ரத்னம்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ஹரியின் முந்தையப் படங்களின் சாயல் இப்படத்தில் எழுந்ததால் இதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ரத்னம் திரைப்படம் வெளியாகி இரண்டு நாள்களில் வெறும் ₹5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 16, 2025

ரூ.76,380 சம்பளம்: கோவை கூட்டுறவு சங்கத்தில் வேலை!

image

கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News August 16, 2025

ஆஸி., கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்

image

ஆஸி., அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும், முதல் முழுநேர பயிற்சியாளருமான பாப் சிம்ப்சன் (89) காலமானார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக பணியாற்றிய அவர், ஆஸி.,யின் தலைசிறந்த ஓபனர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். சிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவராக இருந்த அவர், முதல் தர கிரிக்கெட்டில் 21,029 ரன்கள் குவித்ததுடன் தனது லெக் ஸ்பின் மூலம் 349 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

News August 16, 2025

ராமதாஸ் வழிகாட்டி மட்டுமே: கே.பாலு

image

பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு உரிமை இல்லை என ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால், கட்சியின் 34 விதிகளிலும் அப்படியான எதுவும் இல்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.பாலு தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் நிறுவனர் வழிகாட்டி மட்டுமே, அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் பாலு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ராமதாஸின் மனைவி சரஸ்வதி பிறந்தநாளில் தந்தை-மகன் சந்தித்துள்ளனர்.

error: Content is protected !!