News April 28, 2024
நீலகிரி ஆட்சியர் அருணா விளக்கம்
நீலகிரி கலெக்டர் அருணா கூறியுள்ளதாவது; அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு சிசிடிவி செயலிழப்பு ஏற்பட்டது. வேறு எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. வாக்கு பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளன. சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்து சென்று காட்ட தயாராக இருக்கிறோம் என்றும் (CCTV) கேமரா செயலிழப்புக்கு விளக்கம் அளித்து உள்ளார்.
Similar News
News November 20, 2024
நீலகிரி பழங்குடியினரை சந்திக்கும் ஜனாதிபதி
வரும் 27ஆம் தேதி கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஊட்டி ராஜ்பவன் வருகிறார். அன்றைய தினம் ஓய்வு எடுக்கிறார். நவ.28ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கிறார். 29ஆம் தேதி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.
News November 19, 2024
நீலகிரி தலைப்பு செய்திகள்
1.நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.கூட்டுறவு வார விழாவில் அரசு கொறடா பங்கேற்பு
3.நீலகிரியில் வன விலங்கு கணக்கெடுப்பு தொடக்கம்
4.ஊட்டியில் வீடு கட்டி தருவதாக ரூ.1.50 கோடி மோசடி
5. ஜனாதிபதி வருகை முன்னேற்பாடு குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்
News November 19, 2024
ஜனாதிபதி வருகை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.