News December 11, 2025
தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் குறைத்தீர்ப்பு கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News December 13, 2025
தென்காசி: டூவீலர் விபத்தில் பரிதாப பலி

புளியங்குடி வீரப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த மைதீன் (36) என்பவர் நேற்று இரவு புளியங்குடி – சிந்தாமணியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனது டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்து கொண்டிருந்த வேன் டூவீலரில் மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
News December 13, 2025
தென்காசி: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <
News December 13, 2025
தென்காசி: வக்கீல் கொலையில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை

தென்காசியில் கடந்த 3ஆம் தேதி முத்துக்குமாரசாமி (46) என்ற வழக்கறிஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவசுப்பிரமணியனை (48) தேடி தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 4ம் தேதி நாமக்கல் ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இதில் தற்கொலை செய்து கொண்டவர் சிவசுப்பிரமணியன் என தெரியவந்தது. அவரது உறவினா்கள் நேரில் உறுதிப்படுத்திய பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.


