News December 11, 2025
பெரம்பலூர்: மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, (10.12.2025) மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Similar News
News December 27, 2025
பெரம்பலூர்: பெண் குழந்தை உள்ளதா? APPLY NOW!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், வருகிற 30-ம் தேதி மாலை 5 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சமையல் சிலின்டர்கள் வழங்குவதில் தாமதம் மற்றும் நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இக்கூட்டம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
பெரம்பலூர்: கார் விபத்து- இளம் பெண் பலி!

அரியலூர், செந்துறை ரவுண்டானா பகுதியைச் சேர்ந்த 5 பேர், நேற்று பெரம்பலூரிலிருந்து படம் பார்த்துவிட்டு மாலை காரில் வீடு திரும்பும் பொழுது, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதி அருகே மாடு ஒன்று குறுக்கே வந்ததால், கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் கார்த்திகா (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இது குறித்த குன்னம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


