News December 11, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் டிச.19 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
ஸ்ரீவியில் கஞ்சா வழக்கில் 2 பெண்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் எஸ்.ஐ.தலைமையிலான போலீசார் கஞ்சா விற்பனை தடுப்பு தொடர்பான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யம்பட்டி பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சத்யா (37), மாரியம்மாள் (58) ஆகியோரை சோதனை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் ரூ.35,310 பணத்தை பறிமுதல் செய்தனர்.
News December 28, 2025
விருதுநகர்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 28, 2025
விருதுநகர்: இனி Whatsapp மூலம் தீர்வு!..

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!


