News December 11, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்.. கொந்தளித்த அமித்ஷா

ஒரு தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதி மீது எதிர்க்கட்சிகள் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்தது, அர்த்தமற்றது என அமித்ஷா கூறியுள்ளார். Parliment-ல் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்ட அமித்ஷா, யாரையோ திருப்திப்படுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக பேசியுள்ளார். மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராக உத்தவ் தாக்கரே கட்சி கூட கையெழுத்திட்டுள்ளதாக அமித்ஷா சாடினார்.
Similar News
News December 24, 2025
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

கிறிஸ்துவ சகோதரர்களுக்கு அனுப்ப வேண்டிய சில Xmas நல்வாழ்த்துகள் இதோ.. *மானுடத்துக்கு இரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் *இயேசு கிறிஸ்துவின் அன்பு, இரக்கம், தியாகத்தை இந்த நன்னாளில் நினைவுகூர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் *உயர்ந்த பண்புகளை விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்துவர்கள் வாழ்வில் வளமும், நலமும் பெருகிட மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
News December 24, 2025
BREAKING: கூட்டணி முடிவை தெரிவித்த ஓபிஎஸ் அணி

<<18653920>>அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டேன்<<>> என திட்டவட்டமாக தெரிவித்த OPS, தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யுடன் கூட்டணி சேர அவரது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. செங்கோட்டையன் – OPS இருவரும் நல்ல நட்பில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதனால், இந்த கூட்டணி உருவாக வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
News December 24, 2025
2040-க்குள் நிலவில் இந்தியர்கள் தடம் பதிப்பார்கள்: நாராயணன்

2026 இஸ்ரோவிற்கு மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், ‘ககன்யான்’ திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 3 ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். 2027-ல் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், 2040-க்குள் இந்தியர்களை நிலவில் தரையிறங்க வைக்க திட்டம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


