News December 11, 2025
வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருக: திருமாவளவன்

பார்லிமெண்ட்டில் SIR பற்றிய விவாதத்தில் பேசிய திருமாவளவன், SIR-ஐ தேர்தலையொட்டி அவசர அவசரமாக நடத்தாமல், தேர்தல் அல்லாத பிற காலங்களில் நடத்த வேண்டும் என்றார். குடியுரிமையை சோதனை செய்யும் அதிகாரம் ECI-க்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், அதிகார வரம்பை மீறி ECI செயல்படுவதாக சாடினார். EVM முறையை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Similar News
News December 16, 2025
BREAKING: பள்ளியில் மாணவன் மரணம்.. தமிழகத்தில் துயரம்

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித், பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து தலைமீது விழுந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மாணவனின் உயிர் பிரிந்தது. உறவினர்கள் மோகித்தின் உடலை கையில் ஏந்தி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது.
News December 16, 2025
தர்காவின் இடத்தில்தான் தூண் உள்ளது: வக்ஃபு வாரியம்

தீபத்தூண் என கூறப்படும் தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக வக்ஃபு வாரிய தரப்பு தெரிவித்துள்ளது. <<18509407>>திருப்பரங்குன்றம்<<>> வழக்கின் மீதான இன்றைய விசாரணையில், மனுதாரரின் இந்த மனுவால் தூண் யாருக்கு சொந்தம், நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை உருவாகியுள்ளதாகவும் வக்ஃபு வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, தர்கா சர்வே தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை HC அமர்வு உத்தரவிட்டுள்ளது.
News December 16, 2025
அதிமுக முக்கிய நிர்வாகி ஜெகநாதன் காலமானார்

அதிமுக அம்மா பேரவை துணை செயலாளரும், நெல்லை மாநகராட்சி EX துணை மேயருமான P.ஜெகநாதன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக EX அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஜெகநாதன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.


