News December 10, 2025

‘கைதி 2’ டிராப் ஆனதா?

image

LCU யுனிவர்ஸில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த படம் ‘கைதி 2’. கூலி-க்கு பிறகு ‘கைதி 2’ பணிகளை லோகேஷ் தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர், டோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பி அல்லு அர்ஜுன், பிரபாஸிடம் கதை சொல்லியுள்ளார். இந்நிலையில் கார்த்தியிடம் ‘கைதி 2’ அப்டேட் கேட்கப்பட்டது. அவரோ, அதைப்பற்றி தனக்கு எந்த ஐடியாவும் இல்லை என கூறியுள்ளார். இதனால் படம் டிராப் ஆகிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

Similar News

News December 23, 2025

ஒரே சுக பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் ❤️❤️

image

அரிய மருத்துவ நிகழ்வாக, உ.பி.,யில் அனிதா (30) என்ற பெண்ணுக்கு ஒரே சுக பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. 2 முதல் 3 நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர். இருப்பினும் கணவர் மட்டும் சோகத்தில் உள்ளார். அனிதாவிற்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அது 7ஆக உயர்ந்து உள்ளது.

News December 23, 2025

கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்!

image

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், எப்படியாவது மும்பை மாநகராட்சியை கைப்பற்றும் நோக்கில், உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் கைகோர்த்துள்ளனர். அதன்படி, சிவசேனா (உத்தவ்) 157 இடங்களிலும், ராஜ் தாக்கரேவின் நவநிர்மான் சேனா 70 இடங்களிலும் களமிறங்க உள்ளன. ஜன.15-ல் நடைபெறும் மும்பை மாநகராட்சி தேர்தலில், காங்., தனித்து போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

News December 23, 2025

விஜய்க்கு எதிராக களமிறங்கும் SK

image

GOAT படத்தில் விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய சிவா தற்போது அவர் பக்கமே அதை திருப்பியிருக்கிறார். ஜன.10-ல் வெளியாகும் ’பராசக்தி’ படம், ஜன., 9-ல் விஜய்யின் ’ஜனநாயகன்’ படத்துடன் மோதவுள்ளது. இப்படத்தை உதயநிதியின் குடும்பத்தை சேர்ந்த ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். எனவே, ரசிகர்கள் இது வேண்டுமென்றே விஜய்க்கு எதிராக செய்யும் திட்டமிட்ட சதி என கருத்து தெரிவித்து வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!