News December 10, 2025
விஜய் போட்டியிடும் தொகுதி இது தானா?

TVK வியூகக் குழு எடுத்த சர்வேயில் விஜய் போட்டியிடுவதற்கு 3 தொகுதிகள் உகந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாம். திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு, திருவாடானை ஆகிய தொகுதிகள் தான் அவை. விஜய் தனது பிரசார பயணத்தை திருச்சி கிழக்கில் இருந்து தொடங்கியதால், அவர் அங்கு போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாம். அங்கு விஜய்க்கு சாதகமான களநிலவரம் இருப்பதாகவும் சர்வேயில் தெரியவந்துள்ளதாம். விஜய் எந்த தொகுதியில் போட்டியிடலாம்?
Similar News
News April 4, 2026
நானும் மதுரைக்காரன் தான்: சுந்தர்.சி

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர்.சி, மனைவி குஷ்புவுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தான் வெளியூர்காரன் என்பதே எதிர்க்கட்சியினர் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு என்றார். நான் வெளியூர்காரன் அல்ல. என் பூர்விகம் பழனி, இனி மதுரை தான் என் ஊர் என்ற அவர், மதுரையில் வீடு பார்த்துவிட்டதாக கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News April 4, 2026
IPL TOSS: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

MI-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. உடல்நல குறைவால் இன்றைய போட்டியில் பாண்ட்யா பங்கேற்காததால், சூர்யகுமார் MI கேப்டனாக செயல்படுகிறார். மேலும், தீபக் சஹார், மிட்செல் சாண்ட்னர் ஆகியோரும் களம் காண்கின்றனர். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரு அணிகளும் 13 முறை மோதியுள்ள நிலையில், அதிகபட்சமாக DC 7 முறை வென்றுள்ளது.
News April 4, 2026
அண்ணாமலைக்கு பொறுப்பு.. பாஜக புதிய அறிவிப்பு

பாஜக வேட்பாளராக களமிறங்காத அண்ணாமலை, NDA கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன் என கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பெயர் பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் தவிர, சரத்குமார், குஷ்பு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும், டெல்லி, உ.பி., ம.பி., குஜராத், மகாராஷ்டிரா & அசாம் ஆகிய 6 மாநில பாஜக CM-களும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்கின்றனர்.


