News December 10, 2025
திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் (டிச.12) அன்று காலை 10 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News December 31, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.31) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.01) காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 சதவீதம் அதிக மழை

வடகிழக்கு பருவமழை அக்.01ஆம் தேதி முதல் முதல் இன்று டிசம்பர் 31 ஆம் தேதி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 623.9 மி.மீ., இருக்கும் நிலையில் 712.8 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.
News December 31, 2025
திருவள்ளூரில் இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (31.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


